< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் பெறும் பணி
சிவகங்கை
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் பெறும் பணி

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படும் பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சிவகங்கை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படும் பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது முதல் கட்டமாக ஊரக பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்ெதாகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் சென்று பார்வையிட்டார். அவர் திருக்கோஷ்டியூர், காரைக்குளம், மருதிபட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார். அரசின் விதிமுறைப்படி விண்ணப்பங்கள் பெறப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறும் பணி சிவகங்கை மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

டோக்கன் வினியோகம்

முதல் கட்டமாக ஊரகப் பகுதிகளில் இந்த பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 4-ந் தேதி வரை இந்த பணி நடைபெறும். இதற்காக மாவட்டத்தில் 695 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது முடிந்த பின்னர் 5-ந் தேதி முதல் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்ப படிவம் பெறும் பணி நடைபெறும்.

தற்பொழுது இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறுவதற்காக வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன்களை பெறுபவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் சென்று விண்ணப்பத்தை கொடுக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு கடைசியில் வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்