< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் - சென்னையில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - சென்னையில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
5 Aug 2023 2:57 PM IST

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை நடைபெறும் என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட முகாமில் சென்னையில் 4.7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான 2-ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 16-ந்தேதி வரை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆகஸ்ட் 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தன்னார்வலர்கள் வீடு தேடிச் சென்று விண்ணப்பங்களை வழங்குவார்கள் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்