< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
56 மையங்களில் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாம்
|8 Aug 2023 12:15 AM IST
திருவாடானை தாலுகாவில் 56 மையங்களில் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் 2-ம் கட்டமாக 56 மையங்களில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மல்லனூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் திருவாடானை யூனியன் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அய்யப்பன் முகாமை தொடங்கி வைத்தார்.
இதேபோல் திருவாடானை தாலுகாக்களில் நடந்த முகாம்களில் தாசில்தார் கார்த்திகேயன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன், வட்ட வழங்கல் அலுவலர் சிராஜுதீன், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தாலுகாவில் முதல் கட்டமாக 29 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.