< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் மகளிர் தின பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் மகளிர் தின பொதுக்கூட்டம்

தினத்தந்தி
|
9 March 2023 3:54 AM IST

நாகர்கோவிலில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடந்தது.

நாகர்கோவில்:

மகளிர் தினத்தையொட்டி குமரி மாவட்ட மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பெண்கள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகர்கோவிலில் நடந்தது. பேரணியானது வெட்டூர்ணிமடம் சந்திப்பில் இருந்து தொடங்கி வடசேரி வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் முடிந்தது. அங்கு நடந்த பொதுக் கூட்டத்திற்கு கூட்டுக்குழு நிர்வாகி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் வாசுகி கலந்து கொண்டு பேசினர்.

பொதுக்கூட்டத்தில் நலவாரிய குளறுபடிகளை சரி செய்து விரைவில் பணப்பயன் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும், போதை பொருட்களை தடை செய்ய வேண்டும், பெண்கள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வேண்டும், மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்