< Back
மாநில செய்திகள்
கரூர் ரெயில் நிலையத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்
கரூர்
மாநில செய்திகள்

கரூர் ரெயில் நிலையத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
9 March 2023 12:00 AM IST

கரூர் ரெயில் நிலையத்தில் மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டது.

கரூர் ெரயில் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ரெயில் நிலைய வளாகத்தில் கேக் வெட்டி பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்போது ஒருவருக்கொருவர் கேக்கை ஊட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், கரூர் ெரயில் நிலைய மேலாளர் ராஜராஜன், வர்த்தக ஆய்வாளர் சிட்டிபாபு, புக்கிங் மேலாளர் மணிமோல், ெரயில் நிலைய பெண் பணியாளர்கள், ரெயில்வே பெண் போலீசார், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்