< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெண்கள் பாதுகாப்பு தின விழா
|5 Feb 2023 12:15 AM IST
தேவதானப்பட்டியில் பெண்கள் பாதுகாப்பு தின விழா நடந்தது.
தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு தின விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் சாய் லட்சுமி தலைமை தாங்கினார். விழாவில் பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர்கள் அம்மாவாசை, சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிக்கல்கள், அதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி பேசினர். மேலும் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.