< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில்மகளிர் தின விழா
|11 March 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அன்பரசி தலைமை தாங்கினார். பேராசிரியர் சுதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா பங்கேற்று பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இதையடுத்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் உதவி பேராசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.