திருப்பூர்
உடுமலை வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் மகளிர் தினவிழா
|உடுமலை வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் மகளிர் தினவிழா
தளி
உடுமலை வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மகளிர் தினவிழா
உடுமலை வட்ட சட்ட பணிக்குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கோர்ட்டு வளாகத்தில் கொண்டாடப்பட்டது. உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், உடுமலை ஜே.எம் 1 மாஜிஸ்திரேட்டு விஜயகுமார், ஜே.எம் 2 மாஜிஸ்திரேட்டு மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போட்டிகள் மூன்று நாட்களாகப் பிரித்து 14 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
அதன்படி ஞாபகத்திறன், ஒருசொல் இரு பொருள், ஓர் எழுத்து ஒரு மொழி, கலைந்துள்ள சொற்களை வரிசைப்படுத்துதல், பாட்டிலில் நீர் நிரப்புதல், லக்கி கார்னர், இசைநாற்காலி, கூடையில் பந்து போடுதல், ஒற்றைக்காலில் நிற்பது, கயிறு இழுத்தல், பலூன் ஊதி உடைத்தல், கோலப்போட்டி, பூ முடிதல், குழப்பமான வார்த்தைகள் (ஆங்கிலம்), செங்கல் விளையாட்டு என நடைபெற்றது.
பரிசு
போட்டியில் மூத்த மற்றும் இளம் பெண் வக்கீல்கள், பெண் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் பட்டிமன்றமும், ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கினார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுவினர் செய்திருந்தனர். வக்கீல் சங்கத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
-----------
4 காலம்