< Back
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
திருச்சி
மாநில செய்திகள்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

தினத்தந்தி
|
12 Oct 2023 1:30 AM IST

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலைபகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதிமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடமும், அந்த வார்டு கவுன்சிலரும், மேயருமான அன்பழகனிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்கள் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்