< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம்

தினத்தந்தி
|
18 Jun 2022 12:34 PM IST

டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2 நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று காசிநாதபுரம் பொது மக்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் வெண்ணிலா தலைமையில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை முன்னிலையில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலை மண்ணன் கலந்துகொண்டு 6 மாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு டாஸ்மாக் கடைகளை மாற்றிவிடுவதாக தெரிவித்தார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை திறக்க விடமாட்டோம், மீறி திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்வோம் என்று அதிகாரிகளிடத்தில் ஆவேசமாக தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களை பதிவு செய்த தாசில்தார் வெண்ணிலா மாவட்ட கலெக்டருக்கு அனுப்புவதாகவும், மாவட்ட கலெக்டரின் உத்தரவையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்களுடன் வக்கீல் கள் திருநாவுக்கரசு, இளவரசன், ஊராட்சிமன்ற தலைவர் பாஸ்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்