கரூர்
மகளிர் உரிமைத்தொகை திட்ட 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
|கரூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்ட 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
மகளிர் உரிமைத்தொகை
கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெற 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்குவார்கள்.
பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை
விண்ணப்பத்தை பெற்று கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்ப பதிவு முகாம் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.