< Back
மாநில செய்திகள்
குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன்  பெண்கள் சாலை மறியல்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
20 Sept 2022 12:23 AM IST

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜோலார்பேட்டை,

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரஹாரம் குடியான்வட்டம் பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மற்றும் ஊராட்சி செயலர் சங்கரிடம் பலமுறை புகார் மனு கொடுத்துள்ளனர்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் அக்ரஹாரம் பகுதியில் பெண்கள் கை குழந்தையுடனும், காலிக் குடங்களுடனும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் போனில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

ஆனால் சமாதானம் ஆகாத பொதுமக்கள் மக்கள் உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு வர வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என்றனர்.

குடிநீர் இணைப்பு அனைத்தும் சாலை ஓரத்தில் போடப்பட்டதால் தண்ணீர் பிடிக்க செல்லும் பொழுது விபத்து ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்