< Back
மாநில செய்திகள்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
31 July 2023 4:00 PM IST

திருவண்ணாமலை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை ஊராட்சியில் மேட்டுக்கோசாலை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மேட்டுக்கோசாலை கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் இன்று காலை திருவண்ணாமலை- காஞ்சி சாலையில் காலி குடங்களுடன் வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் வினியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதன் பேரில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறியல் போராட்டத்தினால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்