< Back
மாநில செய்திகள்
செங்கம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

செங்கம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
25 July 2023 11:25 PM IST

செங்கம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம்

செங்கம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம் அருகே உள்ள குப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்திரா நகர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என குடியிருப்புவாசிகள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் செங்கம்- கிளையூர் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த பேருந்துகளையும் சிறை பிடித்தனர். தகவல் அறிந்த செங்கம் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்