< Back
மாநில செய்திகள்
குடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை கள்ளக்காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் கைது
மாநில செய்திகள்

குடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை கள்ளக்காதலனுக்கு அனுப்பிய இளம்பெண் கைது

தினத்தந்தி
|
29 March 2024 10:25 AM IST

உதயகுமார் என்பவர் ஏரல் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம்,

3 வயது பெண் குழந்தையின் ஆபாச வீடியோவை கள்ளக்காதலனுக்கு தாயார் அனுப்பினார். அவர்கள் இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் புதுமனை தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் ராஜா. இவருடைய மகன் உதயகுமார் (வயது 42). இவர் ஏரல் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும், திருமணமான இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார்.

இந்த நிலையில் அந்த இளம்பெண் தனது 3 வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆபாச வீடியோக்களை உதயகுமாரின் செல்போனுக்கு அனுப்பினார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

இதனை அறிந்த இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவர் தனது மனைவி மற்றும் உதயகுமார் மீது ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், உதயகுமார் மற்றும் இளம்பெண் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உதயகுமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இளம்பெண்ணை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர். 3 வயது குழந்தையின் ஆபாச வீடியோவை கள்ளக்காதலனுக்கு அனுப்பிய இளம்பெண், கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்