< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் அருகேமதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
|9 Sept 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, திருப்பாலபந்தல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில், அதே ஊரைச் சேர்ந்த விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் லோகநாதன் மனைவி மாலதி (வயது 41) என்பவர் மதுபாட்டில்கள், சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 11 மதுபாட்டி்கள், 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.