< Back
மாநில செய்திகள்
மனைவி மீது தாக்குதல்
திருவாரூர்
மாநில செய்திகள்

மனைவி மீது தாக்குதல்

தினத்தந்தி
|
24 Nov 2022 12:15 AM IST

பேரளம் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நன்னிலம், நவ.24-

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருப்பாம்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் மணிராமன்(வயது38). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா. சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த மணிராமன் தனது மனைவி சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கீதா பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனிராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

மேலும் செய்திகள்