< Back
மாநில செய்திகள்
தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
சென்னை
மாநில செய்திகள்

தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
14 Sept 2023 12:39 PM IST

தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

சென்னை தண்டையார்பேட்டை ரெட்டை குழல் தெருவை சேர்ந்தவர் இளையராணி. இவருடைய 17 வயது மகன், 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திடீரென இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவீட்டார் இடையே தகராறு ஏற்பட்டது.

இதற்கிடையில் சிறுமி மட்டும் அவளது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டாள். ஆனால் இளையராணியின் மகன் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன இளையராணி, தனது மகனை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறி தண்டையார்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார், அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அவரது உடலிலும் தண்ணீரை ஊற்றினர். பின்னர் இதுபற்றி விசாரிப்பதாக கூறி இளைய ராணியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்