< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெஞ்சுவலியால் துடித்த பெண்: ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த சோகம்
|15 March 2024 7:03 AM IST
நீலகிரியில் ஒரு மணிநேரமாக ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (43 வயது) என்ற பெண்ணுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர், கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் அதிகமானதை தொடர்ந்து, பந்தலூர் பொதுமருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தும், ஆம்புலன்ஸ் வராததால் அந்த பெண் உயிரிழந்தார்.
இதையடுத்து மருத்துவமனை ஊழியர்களிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸ் வராத காரணத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.