திருவாரூர்
இளம்பெண் தற்கொலை முயற்சி
|திருத்துறைப்பூண்டியில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். இதற்கு கடன் தொல்லை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டியில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். இதற்கு கடன் தொல்லை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஷம் குடித்த பெண்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சி மடப்புரத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருடைய மனைவி அமுதா (வயது28). இவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் பலரிடம் கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அமுதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் தற்கொலைக்கு முயன்றதற்கு கடன் தொல்லை காரணமா? என்பது பற்றி திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.