< Back
மாநில செய்திகள்
சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை; கணவர், மாமியார் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை; கணவர், மாமியார் கைது

தினத்தந்தி
|
31 March 2023 3:54 PM IST

சோமங்கலம் அருகே கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

சாவில் சந்தேகம்

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது 33). இவருடைய மனைவி லோகபிரியா (23). படப்பை அடுத்த ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர். இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. கடந்த 27-ந் தேதி காலை லோகபிரியா தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். லோகபிரியா சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கொலை

இதனால் சந்தேகம் அடைந்த மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் கணவர் கோகுலகண்ணன் மற்றும் மாமியார் ராஜேஸ்வரி (61) யிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் லோக பிரியாவை கணவர் கோகுலகண்ணன், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோர் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்