< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்தி குத்து
|6 Aug 2023 8:36 AM IST
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண்மணி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இரவில் ரெயிலுக்காக காத்திருந்த தமிழ்ச்செல்வியை அடையாளம் தெரியாத மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
கத்திக்குத்தில் காயமடைந்த பெண் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.