< Back
மாநில செய்திகள்
சென்னை,சைதாப்பேட்டையில் ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...
மாநில செய்திகள்

சென்னை,சைதாப்பேட்டையில் ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு...

தினத்தந்தி
|
19 July 2023 9:43 PM IST

ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை,

சென்னை ,சைதாபேட்டை ரெயில் நிலையத்தில் ரெயிலில் பழம் விற்கும் ராஜேஸ்வரி என்ற பெண்ணை , மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார். ராஜேஸ்வரி ரெயில் இருந்து இறங்கி நடந்து வந்த போது அதே ரெயிலில் வந்த அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேஸ்வரியை கத்தியால் வெட்டி விட்டு அதே ரெயிலில் ஏறி தப்பித்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

படுகாயமடைந்த பெண் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்