< Back
மாநில செய்திகள்
பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது - ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது - ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
18 Aug 2022 1:14 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பாக பள்ளிகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று கவரைப்பேட்டை அடுத்த புதுவாயலில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதிரடியாக சோதனை செய்தனர்.

இந்த நிலையில், அங்கு விற்னைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 60 கிலோ எடை கொண்ட குட்கா உள்பட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு

பதிவு செய்து குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்ததாக பெட்டிக்கடையின் உரிமையாளரான கோமதி (வயது34) என்ற பெண்ணை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்