< Back
மாநில செய்திகள்

மதுரை
மாநில செய்திகள்
பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

3 Aug 2023 12:54 AM IST
நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
வாடிப்பட்டி,
சமயநல்லூர் மெயின் ரோட்டில் குடியிருந்து வருபவர் காமராஜ். இவரது மனைவி கவிதா (வயது 49). காமராஜ் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். கவிதா அந்தப்பகுதியில் நடை பயிற்சி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை 5.30 மணியளவில் வழக்கம்போல் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மர்மநபர் திடீர் என்று எதிர்பாராதவிதமாக கண் இமைக்கும் நேரத்திற்குள் கவிதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.அதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இது குறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.