< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
|14 Sept 2022 11:00 PM IST
பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி பச்சையம்மாள் (வயது 50). இவர் நேற்று கொண்டசமுத்திரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் பச்சையம்மாளிடம் வழிகேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்.