< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
தடுப்பு காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது
|12 Jun 2023 12:15 AM IST
மரக்காணம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
மரக்காணம் அருகே உள்ள டி.நல்லாளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தானம் மனைவி அருள்(வயது 55). பிரபல சாராய வியாபாரியான இவரை சாராயம் விற்ற வழக்கில் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அருள் மீது சாராயம் விற்றது, கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் அருளை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் அருளை தடுப்புகாவல் சட்டத்தில் பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சிறை காவலர்கள் மூலம் அவருக்கு வழங்கப்பட்டது.