< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பெண் சாராய வியாபாரி கைது - தனிப்படை போலீசார் அதிரடி
|26 Jun 2024 2:52 PM IST
பெங்களூருவில் பதுங்கி இருந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே, அக்கராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி சாமுண்டியை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் சாமுண்டியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சாமுண்டி பெங்களூருவில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்ததால், அங்கு விரைந்த தனிப்படை போலீசார், சாமுண்டியை கைது செய்து கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு லாரி டியூப்பில் 110 லிட்டர் சாராயத்தை சாமுண்டி பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை கொட்டி அழித்த போலீசார், சாமுண்டியை சிறையில் அடைத்தனர்.