< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
திருப்போரூர் அருகே வேன் மோதி பெண் பலி
|27 July 2023 3:06 PM IST
திருப்போரூர் அருகே சரக்கு வேன் மோதி பெண் பலியானார்.
வேன் மோதியது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரமா (வயது 48). இவர் நேற்று முன்தினம் மாலை திருப்போரூர் பஸ் நிலையத்திற்கு சென்று காய்கறிகள், பழங்கள் வாங்கிக் கொண்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பினார். தனது குடியிருப்பின் எதிர் திசையில் ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர் சாலையை கடந்து வீட்டுக்கு செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது.
சாவு
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.