திருவள்ளூர்
பொன்னேரி அருகே சாலை விபத்தில் பெண் சாவு
|பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.
பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரி கரையில் அமைந்துள்ளது அண்ணாமலைச்சேரி குப்பம் கிராமம். இங்கு வசித்து வந்தவர் செல்வி (வயது 35). இவரது தம்பி விக்னேஷ் (30). இருவரும் மோட்டார் சைக்கிளில் அண்ணாமலைச்சேரி மீனவ குப்பத்திற்கு மோட்டார் சைக்கிளில் பொன்னேரி பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மெதூர் கிராமத்தை கடந்து பாரதி நகர் வழியாக செல்லும்போது அங்குள்ள வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிள் ஏறியபோது செல்வி தவறி கீழே விழுந்து விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வியை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.