< Back
மாநில செய்திகள்
புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
கடலூர்
மாநில செய்திகள்

புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

தினத்தந்தி
|
27 May 2023 12:15 AM IST

புதுப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிாிழந்தாா்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ரங்கநாயகி (வயது 65). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரங்கநாயகி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரங்கநாயகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்