< Back
மாநில செய்திகள்
லாரி மோதி பெண் பலி
கடலூர்
மாநில செய்திகள்

லாரி மோதி பெண் பலி

தினத்தந்தி
|
16 Sept 2023 12:15 AM IST

புதுச்சத்திரத்தில் லாரி மோதி பெண் பலியானார்.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் அகமது மியான். இவருடைய மனைவி நபிஷாபேகம்(வயது 46). இவர் சொந்த வேலை காரணமாக புதுச்சத்திரம் சென்றிருந்தார். அங்கு கடலூர்-சிதம்பரம் சாலையை கடந்தபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக நபிஷாபேகம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நபிஷாபேகம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்