< Back
மாநில செய்திகள்
திருத்தணியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

தினத்தந்தி
|
11 Jun 2022 4:30 PM IST

திருத்தணியில் சேலையில் தீப்பிடித்து பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சந்துதெரு பகுதியில் வசித்து வருபவர் பால கிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஷ்வரி (வயது 60). இவர் அதே பகுதியில் வசிக்கும் தனது மகள் சித்ரா என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி வீட்டில் சமையல் செய்யும் போது, அருகில் இருந்த விளக்கில் இருந்த தீ ராஜேஷ்வரியின் சேலையில் பட்டு தீப்பற்றி எரிந்தது. ராஜேஷ்வரியின் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்