< Back
மாநில செய்திகள்
மாங்காடு அருகே கார் மோதி பெண் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மாங்காடு அருகே கார் மோதி பெண் பலி

தினத்தந்தி
|
28 Nov 2022 5:29 PM IST

மாங்காடு அருகே கார் மோதி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52). இவருடைய மனைவி சங்கரி (48). இவர்கள் மண் பானைகள் செய்து விற்பனை செய்து வந்தனர். நேற்று சங்கரி, பானைகளை விற்பனை செய்வதற்காக அவற்றை தலையில் சுமந்து கொண்டு சாலையின் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

கோவூர் அருகே சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சங்கரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சங்கரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கிஷோர் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்