< Back
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி பெண் பலி
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

மின்னல் தாக்கி பெண் பலி

தினத்தந்தி
|
30 May 2023 10:51 PM IST

தச்சாம்பாடி அருேக மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு, தேவிகாபுரம், நெடுங்குணம், தச்சாம்பாடி ஆகிய பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த பெய்தது.

தச்சாம்பாடி அருகே உள்ள செய்யானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி வளர்மதி (வயது 45).

இவருக்கு மோனிஷா, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களும், கோதண்டம், மணிகண்டன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

இ்ந்த நிலையில் வளர்மதி நிலத்தில் பயிர் நடவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. திடீரென மின்னல் தாக்கி வளர்மதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தச்சம்பாடி கிராம நிர்வாக அதிகாரி ரவி கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்