< Back
மாநில செய்திகள்
மின்னல் தாக்கி பெண் பலி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மின்னல் தாக்கி பெண் பலி

தினத்தந்தி
|
26 April 2023 12:15 AM IST

வாய்மேடு அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியானார். 4 ஆடுகளும் இறந்தன.

வாய்மேடு:

வாய்மேடு அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியானார். 4 ஆடுகளும் இறந்தன.

மின்னல் தாக்கி பெண் பலி

நாகை மாவட்டம் வாய்மேடு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 1 மணி நேரம் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி கிராமத்திலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த வீரையன் மனைவி லதா(வயது 42) என்பவர் வீட்டுக்கு பின்புறம் மழையில் நனைந்து கொண்டு இருந்த ஆடுகளை கொட்டகையில் கட்டுவதற்காக சென்றார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே லதா பரிதாபமாக உயிரிழந்தார்.

4 ஆடுகளும் சாவு

மேலும் 2 ஆடுகள்,2 குட்டிகள் என 4 ஆடுகளும் மின்னல் தாக்கி இறந்தன. மின்னல் தாக்கியதில் ஒரு பசு மாடு லேசான காயங்களுடன் உயிர் தப்பியது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்