< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து பெண் பலி
அரியலூர்
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

தினத்தந்தி
|
6 Oct 2022 12:13 AM IST

மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி கார்த்திகா (28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. நேற்று வீட்டில் மாவாட்டுவதற்காக கார்த்திகா கிரைண்டர் ஸ்விட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கார்த்திகா தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது கார்த்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்