< Back
மாநில செய்திகள்
பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
அரியலூர்
மாநில செய்திகள்

பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
21 Aug 2022 11:09 PM IST

பெண் கடத்தலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் பாரி (வயது 59), விவசாயி. இவரது மகள் ஆனந்தி (23). இவர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆனந்தி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்