< Back
மாநில செய்திகள்
ஒரகடம் அருகே கஞ்சா வைத்திருந்த பெண் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஒரகடம் அருகே கஞ்சா வைத்திருந்த பெண் கைது

தினத்தந்தி
|
12 Aug 2022 2:45 PM IST

ஒரகடம் அருகே கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் அருகே ஒரகடம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அவர் ஒரகடம் அடுத்த வல்லம்- வடகல் பகுதியை சேர்ந்த அம்மு (வயது 31) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அந்த பெண்ணிடம் இருந்த கஞ்சாவை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்