< Back
மாநில செய்திகள்
ஓமலூர் அருகே   பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

ஓமலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
13 Dec 2022 2:19 AM IST

ஓமலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த புளியம்பட்டி வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி துர்கா தேவி (வயது 26). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு வசீகரன் (4) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் துர்கா தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 9-ந் தேதி இரவு வேலைமுடிந்து பிரவீன்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்த போது, சேலையால் தூக்குப்போட்டு துர்காதேவி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று உடலை கீழே இறக்கி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து ஓமலூர் போலீசில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்