< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை
|2 Nov 2022 1:01 PM IST
ஊத்துக்கோட்டை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மோனேஷ் பாபு (வயது 28) இன்ஜினியர். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள புண்ணியப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரோஜா (27) என்பவருக்கும் 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் ரோஜா மனவருத்ததில் இருந்து வந்தார். இந்த நிலையில் ரோஜா நேற்று வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பென்னாலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.