சென்னை
குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை
|காசிமேட்டில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காசிமேடு தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் வைஜெயந்தி (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்கணேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் மகனும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று வைஜெயந்தியின் கணவர் ஜெய்கணேஷ், மாமியார் தமிழரசி மற்றும் அக்கா நித்யா ஆகியோர் வீட்டில் இருந்த போது குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த வைஜெயந்தி வீட்டின் 2-வது மாடிக்கு சென்று மின்விசிறியில் புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த காசிமேடு போலீசார் அங்கு வந்து வைஜெயந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.