< Back
மாநில செய்திகள்
வானகரம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் பலி
சென்னை
மாநில செய்திகள்

வானகரம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் பலி

தினத்தந்தி
|
27 Aug 2023 8:30 PM IST

வானகரம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி குயின் விக்டோரியா சாலையை சேர்ந்தவர் ஹானிகிரேஸ் (வயது 30). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மதுரவாயலில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவில் மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ஹானிகிரேஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்