< Back
மாநில செய்திகள்
சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மாநில செய்திகள்

சார்ஜ் போட்டபடி லேப்டாப் பயன்படுத்திய பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தினத்தந்தி
|
14 Jun 2024 10:53 PM IST

சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரை சேர்ந்தவர் செந்திமயில். இவர் வீட்டில் சார்ஜ் போட்டுக்கொண்டே லேப்டாப்பை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த மாதம் சென்னையில் பயிற்சி பெண் மருத்துவர் சரணிதா என்பவர் லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் விருதுநகரில் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்