< Back
மாநில செய்திகள்
குளத்தில் மூழ்கி பெண் பலி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குளத்தில் மூழ்கி பெண் பலி

தினத்தந்தி
|
2 Jun 2023 11:39 PM IST

அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி பெண் பலியானார்.

அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரபு. இவரது மனைவி சுசிலா (வயது 56). மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஓம் பிரபு மற்றும் சுசிலா ஆகியோர் ஊரில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஓம்பிரபு மனைவி சுசிலாவிடம் காலை உணவு வாங்கி வருவதாகவும், அதுவரை கோவிலிலேயே இருக்கும்படி தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது சுசிலா கோவிலில் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காஞ்சீபுரம் தீர்த்தவாரி குளத்தில் சுசிலா இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்