< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
குளத்தில் மூழ்கி பெண் சாவு
|25 Aug 2023 1:18 AM IST
பேராவூரணியில் குளத்தில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
பேராவூரணியில் குளத்தில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
குளத்தில் மூழ்கினார்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பொன்காடு பகுதியில் வசிப்பவர் ஹஜ்மைதீன் (வயது48). இட்லி, தோசை மாவு வியாபாரி. இவருடைய மனைவி ஷம்ரத்பேகம் (45). இவர் சம்பவத்தன்று அதேபகுதியில் உள்ள செல்வவிநாயகர் கோவில் குளத்திற்கு துணிகளை துவைத்து, குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அங்கு குளத்தில் இறங்கியபோது நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதை அறிந்த பேராவூரணி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் இதுகுறித்து ஹஜ்மைதீன் பேராவூரணி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.