< Back
மாநில செய்திகள்
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலி
சேலம்
மாநில செய்திகள்

மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலி

தினத்தந்தி
|
20 Jun 2023 1:00 AM IST

கொளத்தூர் அருகே மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலியானார்.

மேட்டூர்:-

கொளத்தூர் அருகே மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலியானார்.

துணி துவைக்க...

சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 58). இவருடைய கணவர் கணேசன். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாதம்மாள், தனது கணவரை பிரிந்து விட்டார். அவர் தனது தாயாருடன், செட்டிப்பட்டி அருகே உள்ள அரிசிபாளையத்தில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று மாதம்மாள் தனது துணிகளை துவைப்பதற்காக மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி பகுதிக்கு எடுத்து சென்றார். அங்கு துணி துவைத்து விட்டு் தண்ணீரில் குளிக்க இறங்கினார்.

பலி

அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற மாதம்மாள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனிடையே அந்த பகுதியில் குளிக்க வந்தவர்கள் சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து நீர்த்தேக்கத்தில் மூழ்கிய மாதம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்