பெண் டாக்டர் கொலை சம்பவம்: மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் - குஷ்பு
|முதல்-மந்திரியாக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என்பதே என் கேள்வி? என்று குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் (முதுநிலை மருத்துவ மாணவி) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
"கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் மம்தா பானர்ஜி தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்-மந்திரியாக தொடர்வதற்கு மம்தா பானர்ஜிக்கு தகுதி இருக்கிறதா என்பதே என் கேள்வி?. மேற்குவங்காள விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாய் திறக்கவில்லை; ராகுல் காந்தி ஏன் பேசாமல் இருக்கிறார்?; பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்?. என்று கூறியுள்ளார்.