< Back
மாநில செய்திகள்
திருச்சியில் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.!
மாநில செய்திகள்

திருச்சியில் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
15 Sept 2023 1:36 PM IST

உயிரிழந்த பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவலை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி (வயது 38) மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்