< Back
மாநில செய்திகள்
கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி
சென்னை
மாநில செய்திகள்

கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி

தினத்தந்தி
|
5 Sept 2023 9:21 PM IST

கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

சென்னை கே.கே.நகர், ராணி அண்ணா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வசந்தி (47). இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்த வசந்தி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரது மகள் யுவஸ்ரீ, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அருகில் உள்ள கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு வசந்தியை அழைத்து சென்றார். அங்கு வசந்தியை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராதாகிருஷ்ணன்-வசந்தி தம்பதிக்கு விக்னேஷ் (18) என்ற மகனும் உள்ளார்.

மேலும் செய்திகள்